• Tue. Apr 28th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தாக்குதலுக்கு முன்பு குடும்பத்திற்கு அனுப்பிய செய்தி

Byadmin

Apr 28, 2026


டிரம்ப், துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், TruthSocial/@realDonaldTrum

படக்குறிப்பு, சந்தேக நபர் எனக் கூறி டிரம்ப் வெளியிட்ட புகைப்படம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயற்சித்ததாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வை வெள்ளை மாளிகை தொடங்கியுள்ளது.

31 வயதான கோல் ஆலன் தாமஸ் திங்கட்கிழமை அன்று வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானபோது இரு ஆயுத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவர் எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை.

சனிக்கிழமை வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் விருந்தின்போது பாதுகாப்பு சோதனையைக் கடந்த அவர், ஒரு பகுதியளவு தானியங்கி துப்பாக்கி மற்றும் கைமுறையில் இயக்கக்கூடிய துப்பாக்கி (ஷாட் கன்) மற்றும் மூன்று கத்திகளை வைத்திருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அந்த விடுதியில் நடந்த தாக்குதலின்போது ஒரு ரகசிய சேவை அதிகாரி சுடப்பட்டாலும் தீவிரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் வாழ்நாள் சிறைவாசம் எதிர்கொள்ள நேரிடலாம்.

திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சந்தேக நபர் அவரின் பெயர் பொருந்திய நீல நிற உடை அணிந்து ஆஜரானார்.

By admin