• Fri. Jun 19th, 2026

24×7 Live News

Apdin News

டெலிகிராம் செயலி தடை: மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆதரவு

Byadmin

Jun 19, 2026


நீட்-யுஜி மறுதேர்வுக்கு முன்னதாக, தேர்வு மோசடி மற்றும் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் டெலிகிராம் செயலியை மத்திய அரசு முடக்கியுள்ளது.

மேலும் ஜூன் 22 வரை நாடு முழுவதும் டெலிகிராம் தளத்திற்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் செய்தித் திருத்தும் அம்சங்களையும் செயலிழக்கச் செய்து, தற்காலிகமாக அதன் அணுகலைஅரசாங்கம் கட்டுப்படுத்தியது.

மேலும் ஜூன் 22-ஆம் தேதிக்குப் பிறகு அணுகலை மீண்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் டெலிகிராம் செயலியில் கசிந்தால் மத்திய அரசு இத்தடையை தற்போது அறிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான மத்திய அரசின் முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. தேர்வுச் செயல்பாட்டின் போது டெலிகிராம் தளத்தில் ஏற்படக்கூடிய கசிவுகள் அல்லது தவறான பயன்பாடுகளைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்ற அரசின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஆதரித்தது.

மேலும் மிகக்குறைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையைக் கையாண்டதாகவும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை மத்திய அரசு பின்பற்றியதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

By admin