• Fri. Jun 19th, 2026

24×7 Live News

Apdin News

மேகேதாட்டு அணைக்கெதிராக சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானம்

Byadmin

Jun 19, 2026


முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TN Assembly

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் ஜோசப் விஜய் இதற்கான அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தில்,”காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்துதாகவும் தீர்மானம் கூறுகிறது.

மேலும்,”காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.” என கூறுப்பட்டுள்ளது.

By admin