• Sat. Oct 10th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடக்கும் நாளில் ராகுல் காந்தி சென்னை சென்றது ஏன்?

Byadmin

Oct 10, 2026


காங்கிரசும் காக்ரோச் ஜனதா கட்சியும்: நெருக்கம் எவ்வளவு, இடைவெளி எவ்வளவு?

    • எழுதியவர், ஷுபாங்கி மிஸ்ரா
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை திரண்டு போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்தது. போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை அடைவதைத் தடுக்கும் வகையில் டெல்லி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இருப்பினும், ஏராளமான மாணவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரும் காவலில் எடுக்கப்பட்டனர். அபிஜீத் தீப்கே, நேஹா போரா ஆகியோருடன் மமதா பானர்ஜி, பிருந்தா காரத், தீபங்கர் பட்டாச்சார்யா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில், கடந்த சில நாள்களாக ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இல்லை.

சென்னையில், காங்கிரஸ் கட்சியின் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அவர் தமிழ்நாடு வந்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யையும் அவர் சந்தித்திருந்தார்.

சனிக்கிழமை மாலையில் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அனைத்துத் தலைவர்களையும் கைது செய்யுங்கள். அனைத்து இளைஞர்களையும் கைது செய்யுங்கள். எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். நாங்கள் உங்களைச் சுற்றி வளைத்திருக்கிறோம்; பின்வாங்கப் போவதில்லை.” என்று குறிப்பிட்டிருந்தார்.

By admin