• Mon. Aug 24th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி சிஜேபி போராட்டம் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு – எதற்காக? பிபிசி புலனாய்வு

Byadmin

Aug 24, 2026


 முக அடையாள தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு

    • எழுதியவர், நய்லா க்வாஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஜூலை 20 அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்த ஒரு பத்திரிகையாளர் எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டார்.

புலனாய்வு பத்திரிகையாளரான ஸ்ரிஷ்டி ஜெய்ஸ்வால், ஜந்தர் மந்தரில் போராட்டத்தைப் பற்றி செய்தி சேகரித்து கொண்டிருந்தார். போராட்ட இடத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு வேன் மீது அவர் கேமராவை ஜூம் செய்தார். அதன் உள்ளே இருந்த மானிட்டரில் அவருக்கே அவரது முகம் தெரிந்தது.

ஸ்ரிஷ்டியின் கூற்றுப்படி, அந்த கேமரா அவரது முகத்தை நெருக்கமாகவும் தொலைவாகவும் தொடர்ந்து ஜூம் செய்து கொண்டிருந்தது.

“முதலில் என்னையே அடையாளம் காண ஒரு விநாடி ஆனது. பிறகு ‘ஐயோ, இது நான்தான்’ என்று உணர்ந்தேன்,” என்கிறார் அவர்.

அந்த வேனுக்குள் பல திரைகளில் பல்வேறு வகையான கண்காணிப்பு நடைமுறைகள் நடப்பதை அவர் பார்த்ததாக கூறுகிறார். இதுகுறித்து உள்ளே இருந்த அதிகாரியிடம் அவர் கேட்டபோது, அங்கு PTZ (Pan-Tilt-Zoom) கேமராக்கள் இருப்பதாகவும், அவை தானாகவே ஜூம் செய்யும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதும், வேனின் கதவு மூடப்பட்டது.

By admin