ரத்த நிலவு
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.
அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது.
இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.
பகுதி சந்திரகிரகணம்
சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும்.
ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது. வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும்.
வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே நிலவு ‘பிளட் மூன்’ எனப்படும் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும்.
ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்தது.