• Fri. Jun 19th, 2026

24×7 Live News

Apdin News

‘தனிநபர் மீதான கடன் ரூ.1.28 லட்சம்’: மக்கள் கவலைப்பட வேண்டுமா?

Byadmin

Jun 17, 2026


தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன்

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

‘தமிழ்நாட்டில் பிறக்கும் ஒரு குழந்தை, இணை மாநிலங்களைவிட (கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா) மிக அதிக கடன் சுமையுடன் பிறக்கிறது’ என, தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தனிநபர் மீதான கடன் தொகை, 2025-26 ஆம் ஆண்டில் 1,28,934 ரூபாயாக உயர்ந்துவிட்டதாக, அரசின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் தனி நபர் மீதான கடன் என்பது 67,087 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இதன் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தக் கடனால் தனி நபர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை செவ்வாய்க் கிழமையன்று தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், ” 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டைப் போலவே தொழில்துறை அமைப்பு மற்றும் பொருளாதார அளவு கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பீடு செய்தோம்.” எனக் கூறினார்.

By admin