• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தின் அதிரடி அப்டேட்

Byadmin

Oct 27, 2026


தமிழக அரசியலில் விரைவில் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கும் நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் நித்யா ரெட்டி என எனும் காவல்துறை அதிகாரி வேடத்தை ஏற்றிருக்கும் நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திரத்திற்கான அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம் ‘ திரைப்படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்… நடிப்பில் தனித்துவத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேரன்பை பெற்ற நடிகை சாய் பல்லவி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கான அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அவர் நித்யா ரெட்டி எனும் கம்பீரமான பெண் காவல்துறை அதிகாரியாக தோன்றுகிறார். இது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

The post தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தின் அதிரடி அப்டேட் appeared first on Vanakkam London.

By admin