• Fri. Aug 7th, 2026

24×7 Live News

Apdin News

தமிழக சட்டப்பேரவையில் விஜய் விமர்சனத்திற்கு உதயநிதி பதில் என்ன?

Byadmin

Aug 7, 2026


காணொளிக் குறிப்பு, “பேப்பர் படிச்சா தெரிஞ்சிருக்கும்” – முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவரின் பதில்

காணொளி: ‘பேப்பர் படிச்சா தெரிஞ்சிருக்கும்’ – விஜய் விமர்சனமும் உதயநிதி பதிலும்

பிரசுரிக்கப்பட்டது

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் காவிரி தொடர்பான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய் குறுவை நிவாரண தொகுப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது எனவும் இதை செய்தித்தாளை படித்தாலே தெரிந்திருக்கும் என கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விவசாயிகள் கேட்பது நிவாரண தொகுப்பு அல்ல வறட்சி நிவாரண தொகுப்பு என்றும் தெரிவித்தார். இதற்கு செய்தித்தாளை படித்தால் மட்டும் போதாது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin