• Fri. Aug 7th, 2026

24×7 Live News

Apdin News

ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பால் வங்கதேசம் இந்தியா மீது கோபம் ஏன்? முழு பின்னணி

Byadmin

Aug 7, 2026


ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP via Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா தனது பதவி நீக்கத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புது டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார், மேலும் விரைவில் வங்கதேசம் திரும்புவதாகக் கூறினார் (கோப்புப் படம்).

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் ஊடகங்களுடன் நேரடியாகப் பேச அனுமதிக்கப்பட்டதற்கு வங்கதேசம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“அந்த நிகழ்ச்சியின் மூலம், ஷேக் ஹசீனாவும் அவரது கூட்டாளிகளும் வங்கதேச அரசையும் அந்நாட்டு மக்களையும் ஏளனம் செய்துள்ளனர்” என்று வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்த இணையவழிச் செய்தியாளர் சந்திப்பில் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவு அவரது வீடு தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வங்கதேச அவாமி லீக் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேசத்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமான ஷாகிப் அல் ஹசனின் இல்லத்தின் மீது கொடூரமான பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுடன் இந்த உலகப் புகழ்பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

“செய்தியாளர் சந்திப்புக்கு முன்பாக, இந்தச் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்டால், நீதித்துறையைப் பயன்படுத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று பிஎன்பி , ஜமாஅத்-இ-இஸ்லாமி மற்றும் என்சிபி ஆகிய கட்சிகள் தேசிய ஊடகங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தன” என்றும் அவாமி லீக் அறிக்கை தெரிவித்துள்ளது.

By admin