• Fri. Aug 7th, 2026

24×7 Live News

Apdin News

கலப்பட உணவால் நம் உடலில் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து? 5 முக்கிய விஷயங்கள்

Byadmin

Aug 7, 2026


கடந்த சில நாட்களாக, உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை பல உணவு உற்பத்தி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதைப் பார்த்து வருகிறோம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுவையாக இருக்கிறது என்பதற்காக மட்டும் உணவைச் சாப்பிடுவதை விட, சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். (மாதிரிப் புகைப்படம்)

    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகங்கள், கடைகளில் நடத்தும் சோதனைகள் அவ்வப்போது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகின்றன. ஐஸ்கிரீம் கடைகள், பால் பண்ணைகள், ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள உணவகங்களில் சோதனைகள் நடத்தப்படுவது உண்-

இதையொட்டி கலப்படம், தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை குறித்த விவாதமும் எழுகிறது. உணவு நஞ்சாதல் (Food poisoning) மற்றும் அதன் விளைவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

உணவு நஞ்சாதல், கலப்படம் மற்றும் இந்த சூழ்நிலைகளின் விளைவுகள் ஒரு நாள் வயிற்றுப்போக்கு, வாந்தி பிரச்னைகளுக்கு மருத்துவர் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மாத்திரைகள் கொடுப்பதுடன் முடிந்துவிடுவதில்லை.

இதற்கு நீண்டகால விளைவுகள் உண்டு.

உணவு நஞ்சாதல் என்பது வெறும் வயிற்றுக்கோளாறு மட்டும் தான் என்பது ஒரு மிகப்பெரிய தவறான எண்ணமாகும். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

By admin