• Wed. Nov 11th, 2026

24×7 Live News

Apdin News

தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ரவிசங்கர் தாக்கியதாக புகார் – வைரல் காணொளியின் முழு பின்னணி

Byadmin

Nov 11, 2026


துணை சபாநாயகர் ரவிசங்கருடன் கார்த்திக்குமார்.

படக்குறிப்பு, துணை சபாநாயகர் ரவிசங்கருடன் கார்த்திக்குமார்.

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று கூட அவர் கேட்கவில்லை. திடீரென கட்டை மற்றும் இரும்பு போன்ற பொருள்களால் என்னைத் தாக்கினார். அவருடன் இருந்த நபரும் என்னை அடித்தார். இப்படியொரு தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை” என்கிறார், கார்த்திக் குமார்.

திருச்சி துறையூர் தொகுதி எம்.எல்.ஏவும் சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான ரவிசங்கர் மீது தான் இப்படியொரு குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை தொடர்பாகப் பேசச் சென்றபோது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, பிபிசி தமிழிடம் கார்த்திக்குமார் கூறினார்.

பேரவைத் துணைத் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

” ‘எந்த ஊரு நீ?’ எனக் கேட்டு அடித்தார்”

திருச்சி துறையூர் தொகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இவர் சமூக ஆர்வலராகவும் பத்திரிகை ஒன்றில் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.



By admin