• Sun. Apr 19th, 2026

24×7 Live News

Apdin News

தமிழக தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை இரண்டும் தாக்கம் செலுத்துமா?

Byadmin

Apr 19, 2026


தமிழ்நாடு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, திமுக, அதிமுக

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அது பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளன.

மத்திய அரசின் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளில் திமுக முக்கியமான பங்கு வகித்தது. அதேவேளையில் இந்த மசோதாக்களை வரவேற்றிருந்த அதிமுக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்த பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தது.

மசோதா தோல்வியடைந்ததுமே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அது பேசுபொருளாகிவிட்டது. மறுநாளே தமிழக தேர்தல் பிரசார கூட்டங்களில் மோதி, ராகுல்காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அதுதொடர்பாக எதிரணியைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர். என்ன நடக்கிறது?

நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 131-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் தோல்வியடைந்தது.

மோதி அரசு கொண்டு வந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஒன்று, கடந்த 12 ஆண்டுகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.

By admin