• Sun. Apr 19th, 2026

24×7 Live News

Apdin News

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் உயிரிழப்பு!

Byadmin

Apr 19, 2026


விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டி அருகே உள்ள ‘வனஜா பட்டாசு ஆலை’ என்ற தனியாருக்கு சொந்தமான ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் முதலில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு 6ஆக உயர்ந்துள்ளது.

விபத்தின் தாக்கத்தால் பட்டாசு ஆலையின் 4 அறைகள் முழுமையாக இடிந்து தரைமட்டமானதுடன், சுமார் 10 கி.மீ தூரம் வரை அதிர்வு உணரப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin