• Sun. Aug 23rd, 2026

24×7 Live News

Apdin News

தமிழர்கள் இந்தி படங்களில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Aug 23, 2026


பாலிவுட்டில் தமிழர்கள், சென்னை எக்ஸ்பிரஸ், ரஜினிகாந்த்

பட மூலாதாரம், UTV Motion Pictures, Red Chillies Entertainment

படக்குறிப்பு, சென்னை எக்ஸ்பிரஸ் (2013) திரைப்படத்தின் இந்த விளம்பர போஸ்டர் வெளியானபோது, சில விமர்சனங்களை எதிர்கொண்டது.

‘ரா ஒன்’ (2011) பாலிவுட் திரைப்படத்தின் நாயகன் சேகர் சுப்பிரமணியன் (ஷாருக்கான்) பிரிட்டனில் பணிபுரியும் ஒரு தமிழன். ஒரு கேம் டிசைனரான சேகருக்கு ஒரு வித்தியாசமான உணவுப் பழக்கம் இருக்கும், அது தயிருடன் நூடுல்ஸ் கலந்து சாப்பிடுவது.

அதேபோல, சென்னை எக்ஸ்பிரஸ் (2013) திரைப்படத்தில் கதாநாயகி மீனம்மா (தீபிகா படுகோன்) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது கிராமத்தில் எல்லோரும் ஆயுதங்களுடன் திரிவது போலவும், முரட்டுத்தனமானவர்களாக, ஆங்கிலம் தெரியாதவர்களாக சித்தரிக்கப்படுவார்கள். அதிகாலையில், பல இட்லிகளை சாப்பிடுவார்கள்.

அந்த ஊரில் காவல்துறைக்கு அதிகாரம் இருக்காது. நாயகன் ராகுல் (ஷாருக்கான்), எப்படி அந்த ஊரையும் மீனம்மாவின் குடும்பத்தையும் மீறி நாயகியோடு சேர்கிறான் என்பதே கதை.

இந்த இரு திரைப்படங்களிலும் தமிழ் கதாபாத்திரங்களைத் தாண்டி இன்னொரு பொதுவான அம்சம், ‘ரஜினிகாந்த்’. குறிப்பாக, சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ‘தலைவருக்கு’ சமர்ப்பணம் என வரும் ‘லுங்கி டான்ஸ்’ பாடல்.

‘மீசையை முறுக்கி, அண்ணனை போல கண்ணாடி அணிந்து, இளநீருடன் லஸ்ஸி சேர்த்து’- இது அந்தப் பாடலின் தொடக்க வரிகள்.

By admin