14
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகர் ராம் நிதின் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கார்த்திக் ஜெய் பழனி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ராம் நிதின் -தேஜு அஸ்வினி- பிரார்த்தனா நாதன் – ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
ரொமான்டிக் என்டர்டெய்ன்ராக தயாராகும் இந்த திரைப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி – ரெடாக்டட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இடை இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள் ,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று தேசிய விருதினை வென்ற ‘பார்க்கிங்’ படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால்… இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.