• Thu. Nov 19th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி முரளிதரன் நியமனம் – விமர்சனம் ஏன்?

Byadmin

Nov 19, 2026


தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி முரளிதரன் நியமனம் மீது எழும் விமர்சனங்கள் - பின்னணி என்ன?

படக்குறிப்பு, எம்.வி. முரளிதரன்

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாடு மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் நியமிக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் அவர் வழங்கிய தீர்ப்பும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது பிறப்பித்த உத்தரவும் இந்த விவாதத்துக்குக் காரணமாகியுள்ளன. இந்த நியமனத்துக்கு தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

யார் இந்த நீதிபதி எம்.வி. முரளிதரன்? அவரது முந்தைய தீர்ப்புகள் ஏன் விவாதப் பொருளாகிறது? அவரது நியமனம் தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கப்படும் கருத்துகள் என்ன?

யார் இந்த நீதிபதி எம்.வி. முரளிதரன்?

எம்.வி. முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். பின்னர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தபோது அவர் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் கவனம் பெற்றது.

பின்னர் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஓய்வுபெற்ற பிறகு தற்போது தமிழ்நாடு மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

By admin