• Sat. Jun 27th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு: சிபிஎஸ்இ பள்ளிகளில் எந்த வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும்?

Byadmin

Jun 27, 2026


சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு சரியான வயது என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“வயதை காரணம் காட்டி என் பிள்ளையை மீண்டும் ஒரே வகுப்பில் படிப்பதற்கு கட்டணம் செலுத்தும் அளவு எனது பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.”

ஜூலை மாதம் பிறந்ததால் வயதை காரணம் காட்டி மீண்டும் அதே வகுப்பில் படிக்க அறிவுறுத்திய பள்ளியில் இருந்து தன் பிள்ளையை மாற்று பள்ளியில் சேர்த்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனா சொன்ன வார்த்தைகள் இவை.

குழந்தைகளை புதிதாக பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் பலர் இது போன்ற சிக்கலான சூழலை எதிர்கொள்கின்றனர்.

தேசிய கல்விக் கொள்கையில் முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் வயதை 6 என, மத்திய அரசு நிர்ணயித்திருப்பதே இந்த குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதால் சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர்த்து மற்ற பள்ளிகளில் மாநில அரசு வகுத்துள்ள 5 வயது என்பதே பின்பற்றப்படுகிறது.

By admin