• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் எம் சாண்ட், ஜல்லி விலை திடீர் உயர்வு ஏன்? வீடு கட்டும் நடுத்தர குடும்பங்கள் தவிப்பு

Byadmin

Jun 13, 2026


தமிழ்நாட்டில் எம் சாண்ட், ஜல்லி விலை திடீர் உயர்வு ஏன்? வீடு கட்டும் நடுத்தர குடும்பங்கள் தவிப்பு

பட மூலாதாரம், Getty Images

“சொந்த வீடு என்ற கனவுடன் எனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டத் திட்டமிட்டேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியைத் தொடங்கியபோது ரூ. 17 லட்சம் செலவாகும் என்று மதிப்பிட்டிருந்தேன். ஆனால், பத்து மாதங்களில் கட்டுமான செலவு 25 லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டது.”

கோவை துடியலூரில் வசித்து வரும் செந்தில்குமாரின் ஆதங்கம் இது. கடந்த சில நாட்களாக அதிகரித்த கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தால் இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இவரைப் போலவே, தமிழ்நாடு முழுவதும் சொந்த வீடு கட்டும் நடுத்தர குடும்பத்தினர் பலரும் இந்த விலையேற்றத்தால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

கல் குவாரிகளில் அரசு நடத்தும் சோதனைகளைத் தடுக்கவே எம் சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் செயற்கையாக விலை உயர்த்தப்பட்டிருப்பதாக மணல் லாரி உரிமையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கட்டுமானப் பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்துள்ளார்.

By admin