• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

சத்தீஸ்கரில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது

Byadmin

Jun 13, 2026


சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கஞ்சா கடத்தி வரப்பட்ட லாரியை மடங்கிப்பிடித்த காவல்துறையினர், 2 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து பல்ராம்பூர் எஸ்.பி. வைபவ் பேங்கர் கூறுகையில்,

ஏற்கனவே டிசம்பர் 2025-ல், இப்பகுதியில் சுமார் 12 குவிண்டால் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த வழக்கின் தொடர்ச்சியாக, மற்றொரு சந்தேக நபரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.

பல்ராம்பூர் மற்றும் வசந்த்பூர் போலீசார், போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படை (ANTF) மற்றும் சைபர் செல் ஆகியவற்றின் குழுக்கள் அவரது நடமாட்டத்தையும் இருப்பிடத்தையும் தீவிரமாக கண்காணித்து வந்தன.

தொடர் கண்காணிப்பின் மூலம் லோகேஷ் சர்மா அப்பகுதியில் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல்ராம்பூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் அதில் இருந்து மொத்தம் 1941.110 கிலோ சட்டவிரோத போதைப்பொருளை கைப்பற்றி உள்ளனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ. 10 கோடி ஆகும். குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.



By admin