• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் ஒரு புத்தகம் நூலகத்தை அடைவது எப்படி? கடக்க வேண்டிய 13 கட்டங்கள்

Byadmin

Nov 10, 2026


தமிழ்நாட்டில் ஒரு புத்தகம் நூலகத்தை அடைவது எப்படி? கடக்க வேண்டிய 13 கட்டங்கள்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தில் தரமற்ற அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நூல்கள் இடம்பிடித்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, ஒரு நூல் எப்படி அரசின் பொது நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின்”வெளிப்படைத்தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024″ ஆவணத்தின்படி, ஒரு நூல் நூலக அலமாரியில் இடம் பெறுவதற்கு முன் பல கட்ட பரிசீலனைகள், விலை ஆய்வுகள், தேர்வுக் குழு ஒப்புதல்கள் மற்றும் தரச் சோதனைகளைக் கடந்தே செல்ல வேண்டும்.

முதல் கட்டம்: பதிப்பகங்கள் நூல்களைப் பதிவு செய்தல்

ஒரு நூலை அரசு நூலகங்களுக்குப் பரிந்துரைக்க, பதிப்பகம் அதை நூல்கள் கொள்முதல் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

  • நூலுக்கு முறையான ஐஎஸ்பிஎன் (ISBN) எண் இருக்க வேண்டும்.
  • நூலின் அடிப்படை விவரங்கள் பதிவேற்றப்பட வேண்டும்.
  • 20 முதல் 25 பக்கங்கள் வரை மாதிரி PDF அல்லது EPUB வடிவில் பதிவேற்றப்பட வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

இதன் மூலம் நூல் குறித்த அனைத்து தகவல்களும் அரசின் பரிசீலனை அமைப்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.



By admin