• Wed. Sep 9th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் போது, 2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் ஏன்?

Byadmin

Sep 8, 2026


தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளுக்கு இடைதேர்தல்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அதிமுக சார்பில் வென்று பதவிகளை ராஜிநாமா செய்த 6 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று கோரும் மனு நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தக் கூடாது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் இடைத்தேர்தலை எதிர்கொள்ளப் போவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

மற்ற 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வரும் செப்டெம்பர் 28 ஆம் தேதி இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்குமென்று தெரிவித்துள்ளது.

இந்த 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி வழக்குத் தொடுத்துள்ள வெங்கடாஜலபதி, ‘இந்தத் தொகுதிகளில் வென்றவர்கள், ராஜிநாமா செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கே சாதகமாகும் என்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் லியோ.

By admin