• Sun. Jul 26th, 2026

24×7 Live News

Apdin News

தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை பாஜக அரசு தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியுமா? எப்படி?

Byadmin

Jul 26, 2026


கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை தனது ராஜிநாமாவை பிரதமரிடம் அளித்தார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை தனது ராஜிநாமாவை பிரதமரிடம் அளித்தார்

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அவருக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்து வந்த போராட்டத்தைத் தொடர்ந்து இன்று (ஜூலை 25) பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஒரு போராட்டத்தின் காரணமாக தனது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவர் பதவியைத் துறக்க நேரிட்டது இதுவே முதல் முறை என்பதால் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா மோதி அரசுக்கு ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சிகள் மத்திய அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் மீது பல்வேறு விவகாரங்களில் அழுத்தம் கொடுத்திருக்கின்றன. ஆனால் அதன் தாக்கம் பெரியளவில் இருந்ததில்லை.

இந்த விவகாரத்தில், “மோதி அரசில் ராஜிநாமாக்கள் நடப்பதில்லை” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்த கருத்து பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது. மற்றொரு புறம், பாஜக தலைவர் நிதின் நபின் தனது எக்ஸ் பதிவில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாராட்டியுள்ளார்.

“மத்திய கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் இந்தியாவின் கல்வி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தார். இது தவிர, அவர் பல முக்கியமான முயற்சிகளையும் முன்னோக்கி எடுத்துச் சென்றார்” என நிதின் நபின் பதிவிட்டுள்ளார்.

By admin