• Tue. Nov 24th, 2026

24×7 Live News

Apdin News

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு என்ன?

Byadmin

Nov 24, 2026


தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் - ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

படக்குறிப்பு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் (கோப்புப் படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் ஏதேனும் புகார் அளித்துள்ளாரா என்பது குறித்து, தலைமைச் செயலாளர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுத் தெரிவிக்குமாறும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக ‘லைவ் லா’ இணையதள செய்தி கூறுகிறது.

அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதோடு அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் புகார் எழுந்திருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் எழுந்ததுமே, ‘அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை’ என்று எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுத்தார்.

தமிழக அரசியலில் இந்த விவகாரம் பூதாகரமாக பேசப்பட்டு வரும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

மனுதாரர் தெரிவித்தது என்ன?

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் -  ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

படக்குறிப்பு, கோப்புப் படம்

ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுவது தொடர்பாக, த.வெ.க எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி அலுவலகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் ஏற்கெனவே தனித்தனியாக புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தாமாக விசாரிக்க முன்வந்த தேசிய மகளிர் ஆணையம், இதுகுறித்து விசாரித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

By admin