• Tue. May 26th, 2026

24×7 Live News

Apdin News

தாமஸ் மன்றோ: மெட்ராஸ் மாகாண மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிரிட்டிஷ் அதிகாரி பெயரை சூட்டிய வரலாறு

Byadmin

May 26, 2026


சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி
படக்குறிப்பு, சென்னையில் அமைந்துள்ள சர் தாமஸ் மன்றோ சிலை

    • எழுதியவர், கா அ மணிக் குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

“மெட்ராஸ் மாகாணத்தில் தாமஸ் மன்றோவின் பெயர் போல் பரிச்சயமான, மதிக்கப்படுகின்ற பெயர் இந்தியாவின் வேறு எந்த ஒரு பகுதியிலும் இல்லை. சென்னை நகரில் [பிரான்சிஸ்] சாண்ட்ரி வடிவமைத்த பிரசித்தி பெற்ற குதிரை மீது மன்றோ அமர்ந்திருக்கும் சிலை மன்றோவின் பெயரை அனைவராலும் உச்சரிக்கச் செய்யும். அவர் வாழ்ந்த காலத்தில் மறக்கமுடியாத ஆண்டுகளை செலவழித்த மாவட்டங்களில் அவர் பெயரையோ அல்லது நினைவுகளையோ நிலைநிறுத்த எத்தகையதொரு நினைவுச்சின்னமும் தேவையில்லை” – என்கிறார் மன்றோவின் வாழ்க்கை வரலாற்றாசிரியரான ஜான் பிராட்ஷா.

மன்றோவின் சம காலத்தவரும் பம்பாய் மாகாண ஆளுநருமான மவுண்ட் ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோன், “யதார்த்தமான, நடைமுறை அறிவு, உண்மையான கருணை உள்ளம், சிறிதும் மனித வெறுப்பற்ற நேர்மையான மனம் கொண்ட மனிதர்.” என்று மன்றோவை மதிப்பிட்டார்.

தாமஸ் மன்றோவின் மாறுபட்ட அணுகுமுறை

கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இந்தியர்களை ஒதுக்கிவிட்டு ஆங்கிலேய மரபில் நிர்வாகத்தை மாற்றி அமைக்க எண்ணினார். இந்திய சிற்றசர்களுடனும் ஜமீன்தார்களுடனும் அவர் சமாதானம் செய்து கொண்டார். ஆனால் தாமஸ் மன்றோ எத்தகைய அணுகுமுறையை விரும்பிக் கையாண்டார் என்பதை அவர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம்.

”நாம் நம் கொள்கையைத் தீர்மானிக்கும்போது … நடைமுறைப்படுத்த முடிந்த அளவிற்கு உள்நாட்டு மக்கள் துணை கொண்டு நிர்வகிப்பது சிறந்தது. எப்படி மதிக்கத்தக்க திறமை கொண்டவர்கள் உள்நாட்டு நிறுவனங்களை ஒழித்துவிட்டு ஐரோப்பிய நிறுவனங்களை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தார்கள்? என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த திசை நோக்கி நகரும் ஒவ்வொரு திட்டமும் மக்களை மேலும் மோசமாக்கி நம் அரசை மேலும் பலவீனமாக்கும். நமது ஆதிக்கம் இந்நாட்டில் பாதுகாக்கப்பட சிவில், இராணுவ உயர் பதவிகளை ஐரோப்பியர்களால் நிரப்ப வேண்டும்; நமது ஆதிக்கத்திற்கு ஆபத்தை உண்டாக்காத இதர பதவிகளை உள்நாட்டு மக்களின் கைகளில் விட்டுவிடவேண்டும். உள்நாட்டு மக்கள் செய்யும் வேலைகளை குறைந்த எண்ணிக்கையிலான நாம் செய்து விடலாம் என்று ஆணவத்தில் கருதுகிறோம். இன்னும் பத்து மடங்கு அதிகமான எண்ணிக்கையில் நாம் இருந்தாலும் நிலைமை மேலும் மேலும் மோசம் அடையத்தான் செய்யும்” என்றார் தாமஸ் மன்றோ.

By admin