5
அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்துள்ளது. ஏற்கெனவே மூன்று எம்.எல்.ஏக்கள் பதவி விலகியுள்ள நிலையில் இன்று (26) மேலும் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், அதிலுள்ள பலர் தவெகவை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து, ராஜினாமா கடிதம் கையளித்தனர்.
அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் அறிவித்தார். அத்துடன், அவர்கள் தங்களை தவெகவில் இணைந்துக் கொண்டனர்.
இந்நிலையிலேயே, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ, இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இசக்கி சுப்பையா விரைவில் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் 2011, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ஆட்சியில் இவர் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
இசக்கி சுப்பையாவை தொடர்ந்து மேலும் சில அதிமுக எம்.எல்.ஏக்களும் தவெக பக்கம் சாயலாம் என்று கூறப்படுகிறது.