• Tue. May 26th, 2026

24×7 Live News

Apdin News

‘பாடலுக்கு முழு உரிமை கோர முடியாது’: நீதிமன்ற உத்தரவால் இளையராஜாவுக்கு பின்னடைவா?

Byadmin

May 26, 2026


இளையராஜா

பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘காப்புரிமை சட்டத்தின்படி, இசைப் படைப்பு என்பது பாடலில் இசை மற்றும் மெட்டுகளைக் குறிக்கும். அதில் வரும் வரிகளையோ ஒலிப்பதிவையோ இசையமைப்பாளர் உரிமை கோர முடியாது’

– சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மே 21 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

‘பாடலின் உரிமைகள் திரைப்படத் தயாரிப்பாளருக்கு சொந்தமானவை. அவை சட்டப்பூர்வமாக சரிகம நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன’ எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

‘நீதிமன்ற உத்தரவு மூலம் நீண்டகால போராட்டத்துக்கு சிறு வெளிச்சம் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் சென்றால் முழுமையான தீர்வு கிடைக்கும்’ என திரை விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வழக்கின் பின்னணி

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு ‘அகத்தியா’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

By admin