கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 3 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜியோவானி மெட்ஷி பெரிகார்டு உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 5-7, 7-5, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 6-3, 6-7 (6-8), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பெருவின் இக்னசியோ பியூசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.