• Mon. Nov 30th, 2026

24×7 Live News

Apdin News

திமுக முடிவால் மாறும் கணக்குகள்: தொகுதி மறுவரையறை மசோதாவை மோதி அரசால் நிறைவேற்ற முடியுமா?

Byadmin

Nov 30, 2026


தொகுதி மறுவரையறை மசோதா, பிரதமர் நரேந்திர மோதி, நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர், மக்களவை, மாநிலங்களவை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மசோதா

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கு மோதி தலைமையிலான அரசு முயற்சி மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மோதி தலைமையிலான மத்திய அரசு முயலக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

எனினும், இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் குறித்த விரிவான நிகழ்ச்சி நிரலை அவர் வெளியிடவில்லை. அரசின் முக்கியப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக, அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) மூத்த தலைவரான சுப்ரியா சுலேவும் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்துப் பேசிய அவர், “இந்த நடவடிக்கை நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக இருந்தால், அனைத்துக் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியும். இருப்பினும், இதுகுறித்து எங்களுக்கு இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. முதலில் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அவற்றை நிறைவேற்றுவதற்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் உள்ளதா என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

By admin