• Mon. Nov 30th, 2026

24×7 Live News

Apdin News

மதுவிலக்கு இயக்கத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறிய கதை

Byadmin

Nov 29, 2026


வொர்திங்: மதுவிலக்கு இயக்கத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறிய கதை

படக்குறிப்பு, இந்தக் கலவரம் ஓரளவு சால்வேஷன் ஆர்மி ஊர்வலங்களால் தூண்டப்பட்டது.

    • எழுதியவர், ஜாஷுவா அஸ்கியூ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் ஒரு நகரில் மதுபானத்திற்கு எதிராக நடைபெற்ற இயக்கத்துக்கு வந்த எதிர்ப்பு வன்முறையில் முடிந்த வரலாறு உள்ளது.

நீங்கள் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தெற்கு இங்கிலாந்து முழுவதும் பரவிய வன்முறையான போராட்டங்களின் மையமாக வொர்திங் நகரம் இருந்தது.

உள்ளூர் வரலாற்றாசிரியரான கிறிஸ் ஹேர் மேற்கு சஸ்செக்ஸ் கவுன்டியைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தபோது பிரதான சாலைக்கு அருகே அமைந்திருந்த ஆனி தெருவில் நின்றார்.

கடந்த 1884-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி இங்கு சால்வேஷன் ஆர்மிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்ட வன்முறை சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக அவர் தனது குழுவினரிடம் கூறினார்.

இதைக் கேட்ட மக்கள், அது ஈஸ்டர் முயலுக்கு எதிராக வன்முறை செய்வது போன்றது என்று கூறி ஒருவர் ஏன் அதைச் செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.

By admin