• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

திமுக vs தவெக: அரசியலை தாண்டி தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரிப்பது ஏன்? அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Byadmin

Sep 14, 2026


திமுக vs தவெக: அரசியலை தாண்டி தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரிப்பது ஏன்? அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா

தமிழ்நாட்டின் அரசியலில் கூர்மையான வார்த்தைகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. அரசியல் எதிரிகள், ஒருவரின் கொள்கை, ஆட்சித் திறன், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் விசுவாசங்கள் ஆகியவற்றை கடுமையாக விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. தற்போது திமுகவுக்கும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் (தவெக) இடையே தற்போது நடைபெற்று வரும் மோதல், தனிநபர் தாக்குதல்கள் நிறைந்ததாக உள்ளது.

சமீபத்திய சர்ச்சை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அவசரநிலை காலத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சூழ்நிலைகள் குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து வெடித்தது.

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தும் எந்தப் பதிவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துகள் எதிர்ப்பை ஏற்படுத்த, திமுகவின் மூத்த தலைவர் ஆ. ராசா, சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பேசியபோது, நிர்மல் குமாரை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார்.

ராசாவின் இந்தப் பேச்சு பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களைச் சந்தித்தது. பின்னர் அவர் தமது கருத்துகளைத் திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

By admin