• Sun. Jun 7th, 2026

24×7 Live News

Apdin News

திருச்சியில் பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிப் படுகொலை

Byadmin

Jun 7, 2026


திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் மகபூபாஷா மகன் பாதுஷா (25).

அப்பகுதியில் ரவுடியாக வளம் வந்த இவர் நேற்று இரவு 11.30 மணியளவில் காட்டூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தடுமாறி விழுந்த அவரை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பாதுஷா உயிரிழந்தார்.

தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுஷா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

By admin