• Sun. May 17th, 2026

24×7 Live News

Apdin News

திருச்செந்தூர் கோவிலில் 6 மணி நேரக் காத்திருப்பு.. பொறுமையை இழந்து இரும்பு கேட்டை உடைத்த பக்தர்கள்

Byadmin

May 17, 2026


நேற்று வைகாசி மாதக் கிருத்திகை மற்றும் சர்வ அமாவாசையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதின.

இன்று கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்திருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திருச்செந்தூரில் திரண்டுள்ளனர்.

மேலும் சிலர் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் கோயிலுக்கு வந்துள்ளனர்.

விசேஷ நாட்களன்று காலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்ட போதிலும், கட்டண தரிசன வரிசைகளிலும், பொது தரிசன வழிகளிலும் சுமார் 6 மணி முதல் 7 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக வழக்கமாகத் தனி வரிசை அமைக்கப்படும். ஆனால் இன்று கோவில் நிர்வாகம் முறையான தனி வரிசை ஏற்பாடுகளைச் செய்யாத காரணத்தால் அனைவருமே நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தனர்.

By admin