இந்தநிலையில் தேசிய தேர்வு முகமை, தேர்வர்களின் வசதிக்காக, தேர்வு மையங்களை மாற்றிக்கொள்வதற்கான இணைய வசதியை திறந்துள்ளது. வருகிற 21-ந்தேதி இரவு 11.50 மணி வரை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு மையங்களை மாற்றிக்கொள்வதற்கு எந்த கட்டணமும் இல்லை.
ஹால்டிக்கெட் தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வர்களுக்கு வழங்கப்படும் அனுமதி அட்டையில் தேர்வு மைய விவரங்கள் இடம் பெற்று இருக்கும். தேர்வர்கள் இது குறித்த கூடுதல் விவரங்களை neet.nta.nic.in மற்றும் nta.ac.in ஆகிய இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.