• Sun. May 17th, 2026

24×7 Live News

Apdin News

மலையாள சினிமாவில் தமிழர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்? ‘பாண்டி’ என்பதன் பின்னணி

Byadmin

May 17, 2026


கேரளம், தமிழ்நாடு, சினிமா, திரைப்படங்கள்

பட மூலாதாரம், Anugraha Cine Arts

படக்குறிப்பு, ‘ஒரு யாத்ர மொழி’ (1997) திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் மோகன்லால்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் கருவேலங்காடு எனும் ஒரு கடைக்கோடி கிராமத்தை, ஆள்பலம் மற்றும் பணபலம் கொண்ட பாண்டித்துரை, கருப்பையா சாமி என்ற இருவர் கட்டுப்படுத்துகிறார்கள். கருவேலங்காடு கிராமத்தில் இவர்களது அனுமதி இல்லாமல் எந்த நிலத்தையும் வாங்க/விற்க முடியாது.

இவர்களது தலையீட்டால் தனது நிலத்தை விற்க முடியாமல் தவிக்கும் அந்த ஊர் பண்ணையார் ஒருவர், “அருகிலுள்ள கேரளாவுக்கு சென்று, யாரையாவது ஏமாற்றி அழைத்து வந்து இந்த நிலத்தை விற்று விடலாமா?” எனத் தனது உதவியாளரிடம் கேட்க, “கேரளாவில் யாரையும் ஏமாற்ற முடியாது, அவர்கள் புத்திசாலிகள்” என உதவியாளர் கூறுவார்.

“இங்கு இருப்பது போல் அங்கும் சில முட்டாள்கள் இருப்பார்கள்” எனச் சொல்லும் பண்ணையார், பின்னர் கேரளாவுக்கு சென்று நாயகன் புவனேந்திரனை (நடிகர் திலீப்) ஏமாற்றி நிலத்தை விற்றுவிடுவார்.

உண்மை தெரியாமல் நிலத்தை வாங்கும் நாயகன், பாண்டித்துரை என்ற ‘தமிழ் வில்லனை’ எப்படி எதிர்கொள்கிறான் என்பதே ‘பாண்டிபடா’ (2005) என்ற மலையாள திரைப்படத்தின் கதை.

“பாண்டி என்பது பல்வேறு மலையாள திரைப்படங்களில் தமிழர்களைக் குறிக்கும் ஒரு இழிசொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது” என மலையாள திரைப்படங்கள் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

By admin