• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பதியில் காத்திருப்பு அறைகளை தாண்டி 5 கி.மீ. வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

Byadmin

Oct 4, 2026


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

5 கி.மீ. வரிசை

காத்திருப்பு அறைகளை தாண்டி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருப்பதி மலையில் கடுமையான வெயில் சுட்டெரித்ததால் தேவஸ்தானம் சார்பில் தற்காலிகமாக தார்ப்பாய் பந்தல் அமைக்கப்பட்டது. பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தார்ப்பாய் அகற்றப்பட்டது.

தார்பாய் அகற்றப்பட்டதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர். இதேபோல் திருப்பதியில் சர்வதரிசன டோக்கன் பெறுவதற்காக ஸ்ரீநிவாசம், நிவாசம், பூதேவி மையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்த ஆண்டு தொடக்கம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை கோவிலில் மொத்தம் 2.9 கோடி பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

25 மணி நேரம்

திருப்பதியில் நேற்று 91,296 பேர் தரிசனம் செய்தனர். 32,805 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 5.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.67 லட்சம் லாட்டுகள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 25 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

By admin