• Sun. Oct 4th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை கோடாரியால் தாக்கிய துணை விமானி – காக்பிட்டில் நடந்தது என்ன? வெளியான புதிய தகவல்

Byadmin

Oct 4, 2026


காக்பிட் கதவை எவ்வாறு திறந்தார் என்று நெதன்யாகு, ஸ்மித்திடம் கேட்டார்.

படக்குறிப்பு, ஸ்மித் மச்சார்

இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபை விமானத்தைக் கைப்பற்ற முயன்ற துணை விமானி, இந்திய விமானி ஸ்மித் மச்சார் மீது விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் கோடாரியால் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஃப்ளைதுபை விமானத்தில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு கவனம் பெற்ற இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் தொலைபேசியில் பேசினார்.

செப்டம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவத்தில் ஸ்மித் காட்டிய துணிச்சலை நெதன்யாகு பாராட்டினார். அவரை இந்தியா, இஸ்ரேல் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகின் கதாநாயகன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

துபையிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 170-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பயணம் தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு, விமானம் 17,000 அடி (5,200 மீட்டர்) திடீரென கீழ் இறங்கியது. இதையடுத்து, பயணிகள் தாக்குதல் நடத்தியவரைக் கட்டுக்குள் கொண்டு வந்து, விமானத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

கேப்டன் ஸ்மித் மச்சார், தாம் காயமடைந்து தரையில் படுத்திருந்தபோது விமானம் கீழே செல்வதை உணர்ந்ததாகவும், அப்போது தான் செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

By admin