• Fri. Nov 27th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை தீபமேற்ற உத்தரவு – உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் என்ன நடந்தது?

Byadmin

Nov 27, 2026


திருப்பரங்குன்றம்: 'கல் தூணில் தீபம் ஏற்றுவதாக உறுதி கூறவில்லை' - உச்ச நீதிமன்றத்தில் ஆட்சியர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இந்த கார்த்திகை தீப தினத்தன்று (நவம்பர் 24) ஒருமுறை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அன்றைய தினம் வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவோம் என தாம் கூறவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவோம் என மட்டுமே கூறியதாகவும் மதுரை ஆட்சியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீபம் ஏற்றுவது ஆட்சியரின் வேலை அல்ல என்று கூறியதாக லைவ் லா செய்தி கூறுகிறது.

By admin