• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் கல் தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் – கள நிலவரம் என்ன?

Byadmin

Nov 28, 2026


மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள்
படக்குறிப்பு, திருப்பரங்குன்றம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நவம்பர் 28ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தீபம் ஏற்றியாக வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோவில் மற்றும் தர்காவின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையிடம் (சி.ஆர்.பி.எஃப்) உச்ச நீதிமன்றம் வழங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றத் தேவையான பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் திருப்பரங்குன்றம் வந்தனர்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிகாரிகள் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையருடன் சென்று திருப்பரங்குன்றம் கோவில் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.

By admin