• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

திருமங்கை ஆழ்வார் சிலை பிரிட்டனில் இருந்து 69 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி? முழு பின்னணி

Byadmin

Aug 21, 2026


திருமங்கை ஆழ்வார் சிலை: 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், TN Archeology Department

    • எழுதியவர், ரா. ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கும்பகோணம் அருகே உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் 1957ஆம் ஆண்டு திருடப்பட்டதாகக் கூறப்படும் திருமங்கை ஆழ்வாரின் பழமையான வெண்கல சிலை, சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருந்த இந்தச் சிலை, தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையின் விசாரணை மற்றும் இந்திய அரசின் தூதரக நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிலை, ஆகஸ்ட் 18இல் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பார்வையிட்டார். பின்னர் கும்பகோணம் சிலைக் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய நடைமுறைகளுக்குப் பிறகு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

1957இல் நடந்த சிலைத் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் சிலை உள்ளிட்ட நான்கு பழமையான உலோகச் சிலைகள் 1957 – 1967க்கு இடைப்பட்ட காலத்தில் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் கே. ராஜா அளித்த புகாரின் அடிப்படையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை 2020 பிப்ரவரி 12ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

By admin