• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

திருவள்ளூர் அருகே கொள்ளையில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி கைது

Byadmin

Oct 27, 2026


திருவள்ளூர் அடுத்த ஈக்காடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் முரளி. இவரது வீட்டில் கடந்த 20-ந்தேதி 2 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த கிரிஜா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் டி.வி., மற்றும் பித்தளைப் பொருட்களை அள்ளிச்சென்று விட்டனர்.

போலீசார் வழக்குப்பதிவு

இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக திருவள்ளூர் பெரியகுப்பம் தாவுத்துக்கான்பேட்டையைச் சேர்ந்த அண்ணன் தம்பியான சீனிவாச மூர்த்தி, வீரேந்திர ராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

By admin