• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் இந்த ஆற்றில் தங்கம் தேடும் மக்கள் தினசரி எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?

Byadmin

Oct 27, 2026


ஜார்க்கண்டில் தங்க இருப்புக்குப் பெயர் பெற்ற ஒரு நதி பாய்கிறது. அந்த நதியின் பெயர் ஸ்வர்ணரேகா.

படக்குறிப்பு, 20 கிலோமீட்டர் சுற்றளவில் பரவியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒவ்வொரு காலையிலும் ஆற்றங்கரையில் கூடுகிறார்கள்.

    • எழுதியவர், முகமது சர்தாஜ் ஆலம்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஜார்க்கண்டில் தங்கம் கிடைக்கும் ஆற்றுக்குப் பெயர் பெற்ற ஒரு நதி பாய்கிறது. அந்த நதியின் பெயர் ஸ்வர்ணரேகா. தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் அந்த ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

சிலருக்குத் தங்கம் கிடைக்கிறது. ஆனால், ஆயிரக்கணக்கிலோ அல்லது லட்சக்கணக்கிலோ ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு விற்பனை செய்யக்கூடிய தங்கம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்களின் வருமானம் சில நூறு ரூபாயுடன் நின்றுவிடுகிறது.

ராஞ்சி மாவட்டத்தின் நாக்ரி கிராமத்தில் உள்ள ‘ராணி சுவான்’ என்ற இடத்தில் உற்பத்தியாகி, வங்காள விரிகுடாவில் கலக்கும் ஸ்வர்ணரேகா நதி, சுமார் 474 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது.

உண்மையில், இந்த நதியின் ஒரு பகுதியில் மட்டுமே தங்கத் துகள்கள் கிடைப்பதாக அறியப்படுகிறது. ஜாம்ஷெட்பூர் நகரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில், அண்டை மாவட்டமான செராய்கேலா-கர்சவான் மாவட்டத்தின் சண்டில் வட்டாரத்தில் ஸ்வர்ணரேகா நதிக்கரையோரம் இந்தப் பகுதி அமைந்துள்ளது.

இந்த நதியின் கரையோரத்தில் பல இடங்களில், ஆற்றில் அடித்துவரப்பட்ட மணல் மற்றும் சேற்றிலிருந்து தங்கத் துகள்களைப் பிரித்தெடுத்து, கிராம மக்கள் பல ஆண்டுகளாகத் தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.



By admin