• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

இலண்டன் வூல்விச்சில் 32 வயது நபர் மீது துப்பாக்கிச்சூடு: பொலிஸார் தீவிர விசாரணை

Byadmin

Oct 27, 2026


இங்கிலாந்தின் லண்டன், வூல்விச் பகுதியில் உள்ள பிரான்சிஸ் ஸ்ட்ரீட் வீதியில் 32 வயதுடைய நபரொருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் இலண்டன் பெருநகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸாரால் நேற்று (26) வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதை நேரில் கண்ட சாட்சிகள் எவரேனும் இருப்பின் உடனடியாக தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்கான பின்னணி மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிவதற்காக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ அல்லது வதந்திகளையோ சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பரப்ப வேண்டாம் எனவும், பொலிஸார் வெளியிடும் மேலதிக உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

By admin