• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

திருவள்ளூர்: ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் வெளி மாநிலத்தவர் 3 பேர் பிடிபட்டது எப்படி?

Byadmin

Sep 19, 2026


கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலரை போலிசார் கைது செய்தனர்.

பட மூலாதாரம், AvadiCommissionerate

படக்குறிப்பு, கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“அந்த ஏ.டி.எம் மையத்தில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. யாராவது திருட முற்படும்போது எச்சரிக்கை செய்வதற்கான அலாரமும் (burglar alarm) இல்லை. ஏ.டி.எம் இயந்திரமே கொள்ளை போன இந்த வழக்கில் பல சவால்களை எதிர்கொண்டோம்” என்கிறார், ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம்.

கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிவதில் குப்பைக் கிடங்கு பிரதான பங்கு வகித்ததாக, அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மேட்டுக்கண்டிகை பகுதியில் செப்டம்பர் 5 ஆம் தேதி தனியார் நிறுவன ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை போனது. இந்த வழக்கில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் அருகே உள்ள கூடப்பாக்கம், மேட்டுக்கண்டிகை பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

செப்டம்பர் 5 ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் கொள்ளைச் சம்பவம் நடந்ததாகக் கூறுகிறார், ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம். “அது ஒயிட் லேபிள் ஏ.டி.எம்” என அவர் குறிப்பிட்டார்.

By admin