விவசாய சங்கத் தலைவர் கோவிந்த ராஜ் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலுமாக பொய்த்துப் போய்விட்டது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயகரமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர தி.மு.க. தலைவர் வலுவான குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். எங்களது கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு என்றும் தி.மு.க. பக்கபலமாக இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.