• Sat. Jul 25th, 2026

24×7 Live News

Apdin News

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: டெல்லி சிஜேபி போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது? நேரலை

Byadmin

Jul 25, 2026


மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார் - அவர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் குறித்த தகவலை சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சூழலை தேசவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது; நாட்டின் ஒற்றுமை காக்கப்பட வேண்டும்; இந்தியாவின் ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்டச் சிக்கல்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது; நமது குழந்தைகள் தங்கள் நேரத்தை படிப்பிலும், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதிலும் செலவிட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, எனது ராஜிநாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் அவருக்கு எதிராக சிஜேபி அமைப்பு கடந்த ஒரு மாதமாகப் போராட்டம் நடத்தி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன.

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா அறிவிப்பு வெளியானதுமே டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டம் நடக்கும் இடத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

By admin