• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

தீபாவளி தமிழ்நாட்டில் எப்போது முதல் கொண்டாடப்படுகிறது? 7 கேள்வி – பதில்கள்

Byadmin

Nov 7, 2026


தீபாவளி தமிழ்நாட்டில் எப்போது முதல் கொண்டாடப்படுகிறது? 7 கேள்வி - பதில்கள்

படக்குறிப்பு, தீபாவளி (கோப்புப் படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(தீபாவளியை முன்னிட்டு 2024-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)

இந்தியா முழுவதும் இந்துக்களால் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் பின்னணியில் ஏராளமாக கதைகள் உள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளியைச் சுற்றியுள்ள கதைகள், முக்கியமான தகவல்கள் என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி: தீபாவளி பண்டிகையின் அடிப்படை மற்றும் கொண்டாட்ட பின்னணி என்ன?

பதில்: இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி, அக்டோபர் 17 முதல் நவம்பர் 15க்குட்பட்ட நாட்களில் தீபாவளிப் பண்டிகை அமைகிறது.

இந்தியா மட்டுமல்லாது, வேறு சில நாடுகளிலும் இந்தப் பண்டிகை தினத்தன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும்கூட இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.



By admin