• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

தீபாவளி பண்டிகை – தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இன்று செயல்படும்

Byadmin

Nov 6, 2026


தீபாவளி பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு ஏதுவாக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (8-ந்தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு ஏதுவாக இந்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin