• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

இளையோர் ஒலம்பிக்: மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெள்ளி வென்று தன்வி பத்ரி வரலாற்று சாதனை

Byadmin

Nov 6, 2026


அசாதாரணமான சாதனை:

தன்விக்கு முன்பு, எச்.எஸ். பிரணாய் (2010) மற்றும் லக்ஷ்யா சென் (2018) ஆகியோர் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் வெள்ளி பதக்கங்களை வென்றிருந்தனர். மேலும், சென் எட்டு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பேட்மிண்டன் வீரர்களை உள்ளடக்கிய ‘டீம் ஆல்ஃபா’ அணியுடன் கலப்பு அணி பிரிவில் தங்க பதக்கத்தையும் வென்றிருந்தார்.

டக்கார் இளையோர் ஒலிம்பிக்கில் தன்வியின் கனவு ஓட்டத்தை பாராட்டி, இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் பொது செயலாளர் கூறுகையில், “இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தி தன்வி பத்ரி ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார்.

வெறும் 15 வயதில் வெள்ளி பதக்கம் வென்றது ஒரு அசாதாரணமான சாதனை மற்றும் இந்தியாவிற்கு மிகுந்த பெருமைக்குரிய தருணம் ஆகும்,” என்றார்.

By admin