• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

மருத்துவரை தாக்கியதாக நடிகை அதுல்யா சந்திரா உட்பட மூவர் கைது

Byadmin

Nov 6, 2026


மருத்துவர் குற்றச்சாட்டு:

அங்கு சென்றபோது, ​​நடிகை உட்பட சுமார் 12 பேர் இருந்தனர். அவர்கள் தன்னை தாக்கியதுடன், தன்னிடம் இருந்த இரண்டு செல்போன்கள், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பாட்ஸ் ஆகியவற்றை பறித்து சென்றதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 3.25 லட்சம் ரூபாய் ஆகும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் அத்தைக்கு, மருத்துவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டியதாகவும், தன்னை தொடர்ந்து கொடூரமாக தாக்கியதாகவும் 41 வயதான அந்த மருத்துவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னை தாக்கும்போது நடிகை அதுல்யா சந்திரா அவதூறாக பேசியதுடன், கொன்றுவிடுவதாகவும் மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

By admin